சாப்பிட்ட தட்டில்
மிச்சமிருக்கிறது
நாய்களுக்கு போட்டியான
மனிதனின் பசி.
விருந்தோம்பலின்
மறுபக்கத்தில்..
முகம் சுழித்திருக்கிறது
மனிதத்தின் அகம்.
ருசியின் வறுமையில்
இருந்த விருந்தாளிகள்
வறுமையின் பசிக்கு
எச்சில்களைத் தான் விருந்தாக்குகிறார்கள்.
கௌரவம் தாங்கிய
தட்டுக்களில்
தன்மானமிழந்த பசி
சுயமரியாதையை
தொலைத்துக் கொண்டிருக்கிறது.
இயலாமை..
தூக்கியெறிந்ததை
இல்லாமை..
துரத்தி வந்திருக்கிறது.
ஆமாம்..
இருப்பவர்களின் குப்பைத்தொட்டி
இல்லாதவர்களின் வயிறாகிறது.
♨♨♨♨♨♨♨♨♨♨
நயினார்.
அருமை
ReplyDelete