பெண்....
உறவுகளோடு சேர்ந்திருப்பதாய்
நினைத்து..
சார்ந்து..சார்ந்து..
சோர்ந்து போகிறாள்.
.
முதல்முதலில் ஆணாய்
தன் தந்தைக்கு
விரல் கொடுப்பவள்..
தன் சுய விருப்பத்தற்கு
குரல் கொடுக்க முடியாதவளாய்
இறுதிவரை...
கை விடப்படாத பெண்னாக
தன்னை காண்பித்துகொள்ள
கையை..
உருவ முடியாமல் தவிக்கிறாள்.
.
பெற்றவர்களின் பேதமாய்
நூறு ரூபாய்க்கு
தனக்கு பார்பி பொம்மையும்
தம்பிக்கு..
ஆயிரம் ரூபாய்க்கு
ரிமோட் காரும்...
பெரிய அளவில் வித்தியாசம்
அவளுக்கு தெரிவதில்லை
சகோதரனுக்கு விட்டுக்கொடுக்கிறாள்
பாசத்தை வீட்டுக்கு கொடுக்கிறாள்.
.
இளவரசியாய்..
வலம் வந்தாலும்
காதல் களம் காண சென்று
அதே வேகத்தில் திரும்புகிறாள்
கனவுகளை புதைத்துவிட்டு
தந்தையின் நினைவுகளுக்கு
விதையாகி..
குடும்ப குலபெருமை பேணி
முடிவு செய்துவிட்ட மாப்பிள்ளைக்கு..
கடிவாளமிட்ட கண்களோடு
தலை அசைக்கிறாள்
தந்தையின் கௌரவம்
காக்கப்பட்டதாய்..
தலை..குணிகிறாள்.
.
மணாளன் குணமறிந்து
செயல்பட அறிவுருத்தபடுகிறாள்
கணவனின் நெஞ்சமே ஆலையம்..என போதிக்கப்படுகிறாள்
அது ஆணாதிக்க அடைமொழி என அடையாளப்படுத்த எவருக்கும் துணிவில்லை
.
பணிக்கு செல்கிறாள்
பிணிக்கு வாழ்க்கைப்பட்டவளாய்
குறித்த நேரத்திற்குள் வரையறுக்கப்படுகிறாள்
கடிகாரத்தின் நேரம்
அவளின் கற்பை தீர்மாணிக்க நேரும்போது
தான்... ஆண் வர்க்கத்திற்கு
நேர்ந்துவிட்டவள் என்பதை அவளால் அனுமானிக்க முடிகிறது.
.
அசதியாய் அடுக்களையில் அவள்
வசதியாய் படுக்கையில் இவன்
கேட்கும்போது உணவு பரிமாறி
அவன் திணவுக்கு தானே உணவாய் மாறி..
தன் தேவை தீர்க்கப்படுகிறதோ
இல்லையோ..
சேவைக்கு தனை தருகிறாள்.
.
நினைத்தபோதெல்லாம்
முந்தி விரிப்பவள்
இவள் நினைக்கும்போது
பிந்தி படுப்பான்
எழுச்சியில்லா ஆண் குறியோ
மகிழ்ச்சியில்லா பெண் குறையோ..
இச்சமூகத்திற்கு தெரிவதில்லை
பிள்ளை பெறுபவளுக்கு
பத்து நிமிட வலியென்றால்
பெறாதவளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் வலி என
ஏனோ புரிவதில்லை
தன்னவனின் குறை தெரியாமல்
மலடி எனும் கறை ஏற்பதும்
ஆணாதிக்கம் கற்று தந்த நிறைவான பாடமே..
.
தன் விருப்பு வெறுப்புகளை
இறக்கிவைக்க நினைக்கும்
ஆண் நட்பும் இவளுக்கு..
அச்சுறுத்தவே செய்கிறது
உறவுக்குள் இழுக்கிறது
இல்லையேல் இரவுக்கு அழைக்கிறது
நல்ல நட்பு கிடைத்தாலும்
அதிலும் திருட்டுத்தனத்தை தான்
இச்சமூகம் எதிர்பார்க்கிறது
திருமணமான பெண்னுக்கு
நட்பாய்..
ஆண் தகுதியற்றவன் என முத்திரை குத்துகிறது
ஆணாதிக்கம் தன் முகத்திரையை இழக்கிறது.
.
விதவையை மணமுடிக்க
மனைவியுடன் இருப்பவன்தான் வருகிறான்
உடம்பை மட்டுமல்ல
இவள் உழைப்பையும் பிடிங்கி திங்கவே தாலியை தருகிறான்
பெண்னிற்கு ஆண் கவசம்தான்
அதற்காக இவள் தன்னையே இழப்பது அவசியம்தானா
தன்னையே என்பது உணர்ச்சிகளை அல்ல..
உணர்வுகளை...
உணர்வுகள் புறக்கணிக்கப்படும்போது
உணர்ச்சிகளின் அர்ப்பணிப்பில்
என்ன கிடைத்துவிட போகிறது
.
தேவை அறிந்து சேவை செய்வது
மனைவியின் கடமை
சேவையாகவே தேவையை நாடுவது தாயின் கடமை என...
இவளின் தியாகங்கள் எல்லாம்
கடமை எனும் மூன்றெழுத்தில் முடக்கப்படுவது
எந்த வகையில் நியாயம்.
.
சேர்ந்து வாழ்வதாய் நினைத்து
சார்ந்து.. சார்ந்து..
சோர்ந்துவிட்டாலும்
தீர்ந்துவிட்டது கடமை என
ஒய்ந்துவிடாத பயணம்
வீரியமாய்...
வரமாய்...
கிடைத்தது ஆணுக்கு..
பெண்ணே
தாயை போல் நினைக்கிறேன்
மகளை போல் நினைக்கிறேன்
என்ற பசப்பு வார்த்தைகளுக்கு
மயங்கிவிடாதே..
ஆணாதிக்கத்தின்
வஞ்சக புகழச்சியை தவிர
வேறு.....ஒன்றுமில்லை.
💃💃💃💃💃💃💃💃💃💃💃
ம்... அருமை
ReplyDelete