சிரிப்பு
வறுமையை மூடி மறைக்கும்
சிக்கனமில்லா சிரிப்பு.
பகைவனிடம் சிரி
அவன் பலவீனம் உனக்கு நட்பாகும்.
சிரிப்பை செலவு செய்
உறவுகளை சேமிக்கலாம்.
அன்பு உன்னை வரவேற்க..
சிரிப்பை வீசு.
சண்டை சமாதானத்துக்கு வரும்
ஆயுதமாகும் சிரிப்பு.
தோல்வியில் சிரி
வெற்றி ரசித்துக்கொண்டே வரும்.
காதல் கண்மூடி வரும்.
வாய்விட்டு சிரி.
ஒரு அறிவு குறைய பெற்றதற்கு
மிருகங்கள் வருந்துவது..
இதற்கு மட்டும்தான்.
சிரி...கல..கலவென சிரி.
😃😃😃😃😃😃😃😃😃
நயினாரின் உணர்வுகள்.
சிக்கனமில்லா சிரிப்பு.
பகைவனிடம் சிரி
அவன் பலவீனம் உனக்கு நட்பாகும்.
சிரிப்பை செலவு செய்
உறவுகளை சேமிக்கலாம்.
அன்பு உன்னை வரவேற்க..
சிரிப்பை வீசு.
சண்டை சமாதானத்துக்கு வரும்
ஆயுதமாகும் சிரிப்பு.
தோல்வியில் சிரி
வெற்றி ரசித்துக்கொண்டே வரும்.
காதல் கண்மூடி வரும்.
வாய்விட்டு சிரி.
ஒரு அறிவு குறைய பெற்றதற்கு
மிருகங்கள் வருந்துவது..
இதற்கு மட்டும்தான்.
சிரி...கல..கலவென சிரி.
😃😃😃😃😃😃😃😃😃
நயினாரின் உணர்வுகள்.
உதட்டோரம் வெளியேறும்
எல்லைகளின் வேலி மீறும்
இன்னல்களுக்கு தடை கோரும்
பிரச்சனைகளுக்கு விடை கூறும்
உரிமையாய் படியேறும்
உணர்வுகளால் உறவாடும்
இன்பத்தில் இளைப்பாறும்
இதயங்களில் குடியேறும்
சிரிப்பு.
🌹🌹🌹
சிரி..
ஈர்க்கப்படுவாய்
சிரி..
ரசிக்கப்படுவாய்
சிரி..
ஆராதிக்கப்படுவாய்
சிரி..
நீ மிருகத்திடமிருந்து
வித்தியாசப்பட தற்சமயம்
இது ஒன்றுதான் இருக்கிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நயினாரின் உணர்வுகள்
கவலைகளை மறக்க வேண்டாம்
சிரிக்க பழகு..
மறைந்து போகும்.
சோகத்தை மறைக்க வேண்டாம்
சிரிக்க முயற்சி செய்
காணாமல் போகும்.
தோல்வியை விரட்ட வேண்டாம்
சிரிப்பை பரிசாக கொடு
வெட்கப்பட்டு வெற்றியை காட்டும்.
துன்பத்தில் சோர்ந்து போகாதே
சிரிப்பை பார்.
பக்குவம் பாடம் நடத்துவது தெரியும்.
ஏமாற்றத்தில் துவண்டு போகாதே
சிரிக்க முடியாதுதான்..
ஏமாற்றத்தின் சிரிப்பை ரசி
ரசனையில் தடுமாறும் சிரிப்பு.
பார்க்க அழகாக இருக்கும்.
சிரிப்பதற்காக நடி
நடிப்பதற்காக சிரிக்காதே
சிரிப்பு..
குழந்தைகளின் புகழிடம்.
😄😄😄😄😄😄😄
நயினாரின் உணர்வுகள்.
ஏழையென்றால் என்ன..
எளியோரிடமும் இருக்கும்
இது அழியாத கர்வம்.
மனிதனிடமிருந்து எப்போதும்
எவரும் களவாட முடியாத
நிரந்தர சொத்து.
இல்லாமையோடும்
இயலாமையோடும் போராட
வைக்கும் நம்பிக்கையின்
சேமிப்பு பெட்டகம்.
தோல்வியை தூர்வாரி
வெற்றிக்கு வழிவிடும்
தன்னம்பிக்கையின் ஊக்கமருந்து.
கவலையை விரட்டும்
எதிரியை மிரட்டும்
இது..அன்பின் ஆணவம்.
ஆணோ பெண்ணோ
ஏழையோ செல்வந்தரோ
குழந்தையோ முதியவரோ
இந்த சமுத்துவ முகமூடி
அணிவது அழகோ..அழகு.
சிரிப்பு.
😄😄😄😄😄😄
சிரித்துக்கொண்டே
சொன்னால்
உண்மை கூட
பொய்யை ரசிக்கும்.
சிரித்துக்கொண்டே
ரசித்தால்
தவறுகூட
சரியாகிவிடும்.
சிரித்துக்கொண்டே
மறைத்தால்
களவுகூட
ரசனையாகிவிடும்.
சிரித்துக்கொண்டே
சென்றால்
பாதைகூட
பயணம் வரும்.
சிரித்துக்கொண்டே
எதையும்
ஏற்றுக்கொண்டால்
சோதனைகள்கூட
சோர்ந்துபோகும்.
சிரி..சரி சரியென சிரி
😄😄😄😄😄😄
நயினாரின் உணர்வுகள்.