தந்தையர்தினம் கவிதை
கேட்டதையெல்லாம்
வாங்கி கொடுத்து..
பிள்ளைகளிடம் என் பிரியத்தை
காட்டும்போது..
கெட்டதையெல்லாம் உனக்கு நான்
வாங்கி தந்ததில்லை என்றே
தன் சீர்திருத்தத்தை காட்டுகிறார்.
என் கோபத்தை பிள்ளைகளிடம்
காட்டும்போதெல்லாம்..
ஒரு பார்வையில் என் கோபத்தை
பொசுக்கி..
தன் கம்பீரத்தை காட்டிவிடுகிறார்.
பிள்ளைகளுக்கு..
நல்ல உணவை வாங்கி கொடுத்து
என் அன்பை காட்டும்போதெல்லாம்
பிடித்திருந்ததா என கேட்டு
அக்கறையை காட்டிவிடுகிறார்.
தன் தேவைகளுக்கு என் பதிலை பிள்ளைகள் எதிர்பார்க்கும்போது
என்ன வேண்டுமென்று
கேள்வியை கேட்டே
தேவைக்கு சேவை செய்ய
ஓடோடி வருகிறார்.
நேர்மையாக இருக்க வேண்டும்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
ஒழுக்கமாக இருக்க வேண்டும்
அன்பாக இருக்க வேண்டும்
என பிள்ளைகளுக்கு
நான் வகுப்பெடுத்து என் ஆசையை
சொல்லும்போது..
இறைவனுக்கு நல்ல அடியானாக
இருங்கள் போதுமென்று..
ஒன்றை வரி கவிதையாக
தன் எதிர்ப்பார்ப்பை சொல்லிவிடுகிறார்.
எனக்கு..போட்டியாக
வேறு ஒருவரை காட்ட
இப்போதுவரை முடியவில்லை
என நினைக்கும்போது
நீ என் மகன்டா என்று
என் தந்தையாக காட்டிக்கொண்டே இருக்கிறார்...அப்பா.
நயினாரின் உணர்வுகள்
அருமை
ReplyDelete