அம்மா கவிதை | Amma kavithaigal | Nynarin Unarvugal

உன் அக்கா மகள் கல்யாணத்துக்கு
நீ தாம்பா உதவி பன்னனும்னு
என் அம்மா சொன்னப்ப..
என் சக்திக்கு மீறி
கடன் வாங்கி செஞ்சேன்.

உன் அண்ணன் வேலையில்லாம இருக்கான்பா
பையனுக்கு பீஸ் கட்ட
பணம் வேணும்னு சொன்னப்ப..
நான் செய்றேன்மானு செஞ்சேன்.

உன் தங்கச்சி மகனுக்கு
லேப்டாப் வேணுமாம்
ஏற்பாடு பன்னுனு
அம்மா சொன்னப்ப..
கஷ்டப்பட்டாலும் வாங்கி கொடுத்தேன்.

இப்படி என் அம்மா
உறவுகளுக்காக கேட்டதையெல்லாம்
நான் செஞ்சி..
அவங்கள திருப்திபடுத்தினேன்.
தனக்குனு கேட்காததை கூட
வாங்கி கொடுத்து..
சந்தோசப்படுத்துனேன்.

இப்ப என் அம்மா அழுறாங்க..

கைய பிடிக்காம நடக்கமுடியலயாம்..
சாப்ட முடியலயாம்..
தூங்க முடியலயாம்..
அந்த குரல நான் கேட்டாலும்
அந்த அழுகைய பாத்தாலும்
அவங்க தோளை பிடிச்சி
நான் இருக்கேன்மானு
அவங்க கண்ணீர துடைக்க
என்னால முடியல.

உன் உயிர் என் கைலமா
நான் வர்ர வரை
உனக்கு ஒன்னும் ஆகாதுமானு
இன்னிக்கி சொல்லியிருக்கேன்

மஞ்சகாமாளைல இருந்து
என் அம்மாவ காப்பாத்திடு இறைவா..
சிங்கப்பூர்ல இருந்து
பிளைட் விடுற வரை
என் அம்மா உசுர
என்கிட்ட கொடுத்து வை இறைவா..
என் இளமைய
தொலைச்சா மாதிரி..
என் குடும்பத்தின் அருகாமைய
தொலைச்சா மாதிரி..
என் சந்தோசத்தை
தொலைச்சா மாதிரி..
என் அம்மா உசுர..
தொலைக்காம
பத்திரமா வச்சுக்குறேன்.

என் உணர்வுகளை
காட்ட முடிஞ்ச எனக்கு
என் உரிமையை உணர முடியல
ஆசைய சொல்ல முடிஞ்ச எனக்கு
என் ஆசைய காட்ட முடியல
கடமைக்கு..
கானொளியோடு வாழ்ந்த  எனக்கு..
இந்த ஒரு முறையாவது
கடமைக்கு மகனா வாழ..
வழி காட்டு இறைவா.

பாவப்பட்ட இந்த
வெளிநாட்டு அடிமைக்கு 
நல்ல மகனா வாழ்றதுக்கு
கொஞ்ச நாளாவது
சுதந்திரம் கொடு இறைவா.
💢💢💢💢💢💢💢
நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post