என்னவளிடம்..
ஒரு முத்தம் கேட்டேன்
போதுமா..என்றாள்
இதழ்களை..
மோதவிடும்போது
சமாதானப்படுத்த
மெய் வராமலா போகும்
நினைத்துக்கொண்டே..
உயிர்கள் உறவாட
உணர்வுகள் உரையாட
உதட்டில் கொடு..
போதுமென்றேன்.
அவள் முகத்தில்..
ஒட்டிய வெட்கத்தை
ஓட்டிச் சென்றது..
என் நெருக்கம்
அகத்தில்..
கட்டிய ஆசையை
காட்டி வென்றது..
அவள் இறுக்கம்
பகலென்றாள்...
உன் கூந்தல் ..
இரவின் நகல்
விரி என்றேன்.
சரி ..என சரியவிட்டாள்
அருவி..
குன்றிலிருந்து விழும்
ஆனால்..
இந்த கருத்த அருவி
குன்றிலிலும் எழுந்தது.
நம் காதலை காண..
சன்னலைப் பார்
நிலா வந்துவிட்டது என்றேன்
எப்படி..என்றாள்
நீ கூந்தல் அவிழ்த்ததில்
சூரியன் மறைந்துவிட்டதாம்
நகலை நம்பிய நிலா
பகலை தின்றுவிட்டது.
என் மார்போடு சாய்ந்தாள்
இரு மொட்டுக்கள்..
எனக்குள் பல
மெட்டுக்களை தந்தது.
அதோ..
நம் காதலை காண
ஓடோடி வந்த நிலவை
விரட்ட..
படையெடுத்து வரும்
நட்சத்திரங்களைப் பார்..
ஈடில்லா காதல்
இதுதானாம் செல்லமா
இடையோடு அணைத்தேன்
கைகளால் சன்னலை
மறைத்தாள்.
வானம் அவள்
உள்ளங்கையில்
அடங்கியதோ..
வசந்தம் எங்கள்
வாசலில் இருந்தே
தொடங்கியதோ
கண்களில் முத்தமிட்டேன்
இமை மூடினாள்
என் சுமை நாடினாள்
உதடு கவ்வினேன்
சட்டென இருளும் கவ்வியது
விழி மூடினேனா..
இல்லையே..
நிலவையும்..
நட்சத்திரத்தையும் விரட்ட..
மேகம்தான்..
வேகமாய் வந்திருக்கிறது
எங்கள் மோகம் காண..
உதடுகள் ஈரத்தில்
விளையாடுவதை
இந்த உணர்வுகள்
நெருப்போடு
உறவாடுவதாய்
நினைத்ததோ..
தேகம் கொதித்தது
உதட்டோடு
உயிரை இழுத்தேன்
உணர்வோடு
உடலை சரித்தாள்
சில்லென்ற காற்று
வெப்பச் சலனங்களாய்
மழை...
மழையே தான்
எங்களுக்குள் மட்டுமல்ல
சன்னல் வழியே
ரசித்து கொட்டுகிறது
கை தட்டுவது போலவே
தெரிகிறதடி செல்லமா
நம் ஒய்வில்லா காதலை
ரசிக்க..
வானத்தில் நடக்கும்
மாற்றங்களை..
நாணத்திலா பார்க்கிறாய்
சிவந்துவிடப் போகிறது
சூரியனை விரட்ட
வேறு யார் வருவார்கள்.
சிரித்தாள்...
அட என்னவள்
கண்களின் வெளிச்சத்தில்
இருட்டிலும்
என் உலகம் பிரகாசமே....
💘💘💘💘💘💘💘💘💘