காதல் கவிதை|kadhal kavithai|love kavithai|Nynarin Unarvugal

அச்சம்..
அனுதாபத்தை
காட்டும்போது
துணிச்சல்..
தயக்கத்தை சந்திக்கிறது.

இரக்கம்..
விழிப்பதை பார்த்ததும்
குழப்பம் உறங்கிவிடுகிறது.

கருணை..
வழியில் தெரிந்ததும்
நம்பிக்கை
வாழ்ந்துவிடுகிறது.

நட்போ காதலோ..
கண்ணியம்
கடமையாற்றும்போது
கட்டுப்பாடு
கவலைப்படுவது
அழகோ அழகு.
💗💗💗💗💗💗
நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post