நிலா எங்கே
கடாய் மட்டும் இருக்கிறது.
வடை சுட்ட
பாட்டியும் காணவில்லையே.
🌙🌙
என்ன மாதிரி ஒப்பந்தமோ
இந்த மூன்றாம்பிறையை
அழகாக காட்ட..
வானம் கரியைப் பூசிக்கொண்டிருக்கிறது.
🌙🌙
முகம் மறைத்து என்னவள்..
குடை பிடித்துச் செல்வதுபோல
இந்த நிலவுக்கு யாரோ
குடை பிடித்திருக்கிறார்கள்.
🌙🌙
சட்டென எடை குறைத்து
வந்திருக்கும் நிலவை பார்த்ததும்
என்ன பயிற்சி எடுத்தது என்று
என்னவள் என்னை
குடைய ஆரம்பித்துவிடுவாள்.
🌙🌙
அவசர குடுக்கைதான்
நிலவை வட்டமாக
சூரியன் வரைவதற்குள்
இருட்டிலிருந்து எட்டிப் பார்க்கிறது பூமி.
🌙🌙
அழகிய ரசனைதான்
நிலவை உரசி தேய்த்து
பிறையாக
தொங்கவிட்டிருக்கிறது வானம்.
🌙🌙
அழகிய கீற்றாய் காற்றில் அசையும்
இந்த கன்னிப் பிறையை
சொந்தம் கொண்டாட
வானமும் பூமியும் போட்டி போட
தூக்கி கொண்டு போக
தயாரானார் கதிரவனார்.
🌙🌙🌙🌙🌙