வீசிய வார்த்தைகளை
மீண்டும் எடுத்து
ஊசியால் தைக்கிறாய்.
வரிகளாக
இதயத்தில் விழுந்து..
வலிகளாக வெளியே வருகிறது.
குத்திக் காட்டும்..
வார்த்தைகள் இன்னும் குதறிக் கொண்டிருக்கிறது என்னை
அதற்குள்..
கொளுத்திப் போடுகிறாய்
இன்னும் சில வார்த்தைகளை.
எரியும் எழுத்துக்களில்
அவசர அவசரமாக
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நீ எப்போதும் சொல்லும்
அந்த மூன்று வார்த்தையை.
ஒருவழியாக கண்டுபிடித்தபோது..
ஐயும் யுவும் எரிந்துபோயிருக்க
லவ் மட்டும் ஊசலாடியது
அவசர சிகிச்சைக்கு அனுப்ப
நீ வருவாயா..
நான் மட்டும் செல்லவா.
💗💗💗💗💗💗💗💗