சின்ன சின்ன தீண்டல்
திகட்டாத தேன்கிண்ணங்கள்
பாரமாய் மனமிருந்தால்
பாய்மரமாய் அவள் வருவாள்
படரும் கைகளில்
தொடரும் கவலைகளை
தூர எறிய...
ஈர உதட்டால் சூடு தருவாள்
துவண்ட தோளில்
தொடங்க வருவாள்
முடங்கிய மனம்
அடங்கிடல் முறையோ
என அவள் தேகம்
இடம் மாறும்
என் சோகம் தடம் மாறும்
அழுத விழியில்
தொழுத உதடுகள்
பழுது பார்க்க
முத்தமிடும் நேரம்
மொத்த கலக்கமும்
பித்தம் தெளிய ஓடும்
முடியும் என்பது
விடியலில் மட்டுமல்ல
என்னவளின் படையலிலும்
காண்பதுண்டு..
கழுத்தோடு சேர்த்து
முகத்தோடு இழுத்து
கூந்தலோடு மூடிக்கொள்ளும்
போது..
என் வருத்தங்கள்..
திருத்தங்கள் பெறுவதை
நான் மட்டும் அறிவேன்
முடமாகும் நம்பிக்கையை
அவளின் இதமான முத்தங்கள்
திரும்ப தருவதோடு
விரும்பி வாழ...
அவளின் தீண்டல்கள்
வரமாய் அமைவது
நான் பெற்ற பாக்கியமே...