பிரியாணி|tamil kavithai|Nynarin Unarvugal

என் அழகும் மனமும்..
பார்ப்பவர்களை சுண்டியே இழுக்கும்..
என் மீது..
உங்களுக்கு இருக்கும்
மோகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வீதிக்கு வந்த என்னை
விதி விரட்டி விரட்டிப் பிடிக்கும்போதுகூட..
உங்களின் பசிக்கு நான்..
விருந்தாகவே வந்தேன்.
கட்சிப் பேரணியோ
போராட்ட ஊர்வலமோ
என்னை பாரபட்சமின்றி 
பங்கு போடுகிறீர்கள்.
அரசியல்வாதிகள் என்னை விருந்தாக்கும்போது..
அடிமட்டத் தொண்டன் வரை
என்னை சுவைத்து துவைப்பான்.
எனக்காகவே..
ஒரு சிலர் திருமணத்திற்கு
வருவார்கள்.
என்னை ரசிக்கும்போதும்
சுவைக்கும்போதும்
உங்களுக்குள் ஏற்படும்
ஆனந்தம்..
நான் மீண்டும் பிறக்க காரணமாகும்
காவல் துறை..மட்டுமல்ல
காவி மயங்கள் கூட
கலவரம் என்றால் என்னைத் தான் தூக்குகிறார்கள்..
என்னை அடைய பாக்ஸிங் போட்டபோது...கூட சிரித்தேன்
ஆனால்...
இப்போது 
கள்ளக்காதலுக்கும் நான்
துணை போனேன் என்பதை மட்டும்
என்னால் ஏற்கமுடியவில்லை.
வருத்தங்களுடன்....

பிரியாணி.
🍻🍻🍻🍻🍻
நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post