தமிழ் கவிதை|tamil kavithai|Nynarin Unarvugal

திருவிழாவில் தேர் தொலையுமா..
தொலைந்தது போலத்தான் தனியாக நின்றிருந்தாள் அவள்.
எனக்கும்..அவளுக்கும் ஏற்பட்ட  
ஈர்ப்பை நாங்கள் உணர்வதற்குள்
ஊகித்தான் அவன்.
வாங்க ஸார் பயப்படாதீங்க..
அவன் அழைக்க..
அவள் என்னை கணிவோடு பார்த்து முன் வந்தாள்
எனக்கு துணிவு வந்தது
நீண்ட நாள் ஆசை
அரங்கேற்றிட மனம் அங்கலாயித்தது
வெட்கம் விட்டேன்
பக்கம் சென்றேன்
ஆனந்தம்...ஆரம்பமானது
ஏறினேன்..சின்ன நடுக்கத்துடன்
அவள் தளர்த்திக்கொண்டாள்
நான் அழுத்திக்கொண்டேன்
நான் மேலே...அவள் கீழே..
வானில் பறப்பதாய் தோண்றியது
இத்தனை நாட்கள் 
எப்படி விட்டு வைத்தேன்..
நினைத்துக்கொண்டேன்
இப்போது அவள் மேலே..
நான் கீழே..
சின்ன சின்ன விஷயங்களில்
சந்தோசம் கிடைக்கும்..ஆனால்
சந்தோசம் சின்ன விஷயமில்லையே
கீழே...மேலே..என மூன்று முறை...
கலைத்துவிட்டது
இனி நினைத்த வாழ்க்கையை 
வாழ்ந்துவிட வேண்டும்..
வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் 
ஆணோ..பெண்ணோ...ஏற்றம் இறக்கம் பொதுவானது என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி
இருவரையும் இறக்கிவிட்டான்..
ராட்டினக்காரன் .
நயினாரின் உணர்வுகள் 

Post a Comment

Previous Post Next Post